Pages

Tuesday, October 29, 2013

தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் 40 அகதிகள் பலி!

Tuesday, October 29, 2013
அல்ஜியர்ஸ்::ஐரோப்பாவுக்கு குடிபெயர்ந்து செல்லும் போது பாலைவனத்தில் டிரக் பழுதானதால் தண்ணீர் கிடைக்காமல் நைஜீரிய பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 அகதிகள் பரிதாபமாக இறந்தனர்.
 
ஆப்ரிக்க நாடான சோமாலியா மற்றும் எரிட்ரியா நாட்டில் இருந்து ஏராளமானோர் பிழைப்பு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாகவும், வாகனங்களிலும் சட்டவிரோதமாக செல்கின்றனர். அதுபோல் இத்தாலி லாம்பிதுசா தீவுக்கு படகில் அடிக்கடி ஊடுருவி செல்கின்றனர்.
 
கடத்தல்காரர்கள் ஏராளமான பணம் பெற்று கொண்டு மீன்பிடி படகுகளிலும், டிரக் உள்ளிட்ட வாகனங்களிலும் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி அங்கு அழைத்து செல்கின்றனர். இந்நிலையில் நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டிரக்கில் அல்ஜீரியாவின் டமாரன்ராசெட் நகருக்கு அகதிகளாக சென்றனர்.
 
சகாரா பாலைவனத்தை கடந்து செல்லும் போது நைஜர் வடபகுதியான அர்லிட் நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் டிரக் ஒன்று பழுதானது. இதனால் பாலைவனத்தில் சிக்கிய அகதிகளால் மணல் பரப்பில் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியவில்லை. தண்ணீர் கிடைக்காமல் நாக்கு வறண்டு பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் இறந்தனர். இதுபோல் பாலைவனத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 3ம் தேதி இத்தாலி லாம்பிதுசா தீவு அருகே அகதிகளின் படகு கடலில் மூழ்கியதில் 300 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment