Pages

Tuesday, October 15, 2013

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்று, அங்கு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 40 இலங்கையர் நாடு திரும்பினர்!

Tuesday,15, October, 2013
இலங்கை::அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்று, அங்கு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 40 பேர் நேற்று  இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களில் 12 பெண்களும், 08 சிறார்களும் அடங்குவதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் கடந்த மாதம் 7 ஆம் திகதி படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment