Pages

Sunday, October 20, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: சென்னையில் 3 இடங்களில் ரெயில் மறியல்: 140 புலிகளின் ஆதரவாளர்கள் கைது!

Sunday, October 20, 2013
தாம்பரம்::இலங்கையில் நடைபெறும் காமல்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், ஒருங்கிணைந்த அம்பேத்கர் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு பெரியார் திராவிடர் கழக காஞ்சி மாவட்ட அமைப்பாளர் கண்ணதாசன் தலைமையில் பெண்கள் உள்பட 50 பேர் தாம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் ரெயிலை மறித்து நின்றபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
 
ஒருங்கிணைந்த அம்பேத்கர் மன்ற காஞ்சி மாவட்ட பொருளாளர் கோபிநாத் தலைமையில் 40 பேர் இன்று காலை 11 மணியளவில் குரோம் பேட்டையில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
 
பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் 50 பேர் காலை 11.15 மணியளவில் பல்லாவரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment