Monday, October 28, 2013
கரூர்::கரூர் மாவட்டம் குளித்தலை இரும்பூதிப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாகேஸ்வரன் (33) என்பவர் வசித்தார். இவருக்கு நாகேஸ்வரி (26) என்ற மனைவியும் விஜயப்பிரியா (7), கவிப்பிரியா (6), சிநேகப்பிரியன்(5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு நாகேஸ்வரி தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.பின்னர்
திருநெல்வேலி அகதிகள் முகாமில் தங்கியிருந்த கலைச்செல்வி என்பவரை நாகேஸ்வரன் 2வது திருமணம் செய்தார். இவர்களுக்கு பவீஸ்னா என்ற 11 மாத குழந்தை உள்ளது. இவரும் கடந்த 25ம் தேதி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நாகேஸ்வரன் நேற்று வீட்டின் சாரத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். குளித்தலை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

No comments:
Post a Comment