Saturday, October 5, 2013

ஆந்திர எல்லையில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை சினிமா பாணியில் 8 மணி நேரம் நடந்த மோதல்!

Saturday, October 05, 2013
சென்னை::தமிழகத்தை கலக்கி வந்த தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி, ஆந்திரா எல்லையில்  தீவிரவாதிகள் பதுங்கிய வீட்டை இன்று அதிகாலை போலீசார் சுற்றிவளைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்  கொல்லப்பட்டனர். இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. படுகாயமடைந்தனர்.

வேலூரில் கடந்த ஜூலை 1ம் தேதி இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார். அதே மாதத்தின் இறுதியில்  சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கொலையாளிகளைப் பிடிக்க சிபிசிஐடி கூடுதல் டிஜிபி நரேந்திர பால்சிங், ஐஜி மகேஷ்குமார் அகர்வால், எஸ்பி அன்பு தலைமையில் தனிப்படைகள்  அமைக்கப்பட்டன. உளவுப் பிரிவு ஐஜி கண்ணப்பன், எஸ்பி அருளரசு ஆகியோர் கொண்ட தனிப்படைகளும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  தலைமறைவாக உள்ள போலீஸ் பக்ருதீன் உள்பட சில குற்றவாளிகளுக்கு, இந்து அமைப்பினர் மீதான தாக்குதல்களில் தொடர்பு இருப்பது தெரிய  வந்தது. 2011ம் ஆண்டு அக்டோபரில் அத்வானி பயணத்தின்போது மதுரை திருமங்கலத்தில் பாலத்தில் குண்டு வைத்த வழக்கு, ஆடிட்டர் ரமேஷ்,  இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் கொலை வழக்குகள் மற்றும் தென்காசியில் குமார் பாண்டியன் கொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன்  சம்பந்தப்பட்டவர். இதனால் அவரது தலைக்கு போலீசார் ரூ.5 லட்சம் அறிவித்திருந்தனர். அதோடு கூட்டாளிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்,  அபு பக்கர் சித்திக் ஆகியோரது தலைக்கும் தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வரும் 18ம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வரவிருக்கிறார். இதற்கிடையே சென்னையில் இந்து அமைப்புகளின்  முக்கிய பிரமுகர்களை குறிவைத்து தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் சென்னை  முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

சென்னை லாட்ஜில் பதுங்கியிருந்த போலீஸ் பக்ருதீனை, உளவுப் பிரிவு போலீசார் கைது செய்து சிபிசிஐடி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ்  பக்ருதீனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் பல தலைவர்களுக்கு குறி வைத்துள்ளதாகவும், அவர்களில் யாராவது ஒருவரை  தீர்த்து கட்டும் நோக்கத்தோடுதான் சென்னை வந்ததாகவும் தெரிவித்திருக்கிறான். இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.

விசாரணையில் பக்ருதீன் கூறுகையில், ‘தமிழக&ஆந்திர எல்லையான புத்தூர் ரயில்நிலையம் அருகில் மேதர் வீதியில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில்  கூட்டாளிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், பறவை பாஷா(எ)அபுபக்கர் சித்திக் ஆகியோர் பதுங்கியுள்ளனர். அவர்களுடன் ஒரு பெண், 2  குழந்தைகள் வசிக்கின்றனர். கடந்த 6 மாதமாக அங்கு உள்ளனர். நானும் அங்குதான் இருந்தேன். சென்னைக்கு வந்த இடத்தில் மாட்டிக் கொண்டேன்.  அவர்களிடம் வெடிகுண்டுகள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் உள்ளன’ என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஐஜி கண்ணப்பன், எஸ்பிக்கள் அருளரசு, ரூபேஷ்குமார் மீனா, கூடுதல் எஸ்பி செந்தில்குமார், திருத்தணி இன்ஸ்பெக்டர் லட்சுமணன்  ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று நள்ளிரவில் பக்ருதீனை அழைத்து கொண்டு அந்த வீட்டுக்குச் சென்றனர். பக்ருதீன்  வீட்டை காட்டியவுடன் அவரை தனியாக காரில் அமர வைத்தனர். அதன்பின் போலீசார் அதிகாலை 4 மணியளவில் பால்காரர்கள் வேடத்தில் சென்று  அந்த வீட்டின் கதவை தட்டினர். அப்போது கதவை திறந்த பெண்ணிடம், ‘பால் வேண்டுமா’ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘ஆண்கள் யாரும் இல்லை.  எங்களுக்கு பால் வேண்டாம்’ என்று கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் ஏதேதோ கேட்டு பேச்சு கொடுத்தனர். இதையடுத்து, வீட்டிலிருந்து  ஒருவன் சட்டையில்லாமல் வந்தான்.

அவனைப் பார்த்ததும் உளவுப் பிரிவு போலீசார், அவன்தான் தீவிரவாதி பிலால் மாலிக் என்று கண்டுபிடித்தனர். அவனும் வந்திருப்பது போலீசார் என  அறிந்து சுதாரித்துக் கொண்டு வேகமாக வீட்டுக்குள் செல்ல முயன்றான். அப்போது இன்ஸ்பெக்டர் லட்சுமணன், பிலால் மாலிக்கை இழுக்க  முயன்றுள்ளார். வீட்டுக்குள் இருந்த தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பறவை பாஷா ஆகியோர் எழுந்து வந்து லட்சுமணனை வீட்டுக்குள் இழுத்துப்  போட்டு கதவை மூடிக் கொண்டனர். போலீசார் கதவு, ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர். அதற்குள் இன்ஸ்பெக்டரை அவர்கள் கத்தியாலும்,  அரிவாளாலும் வெட்டினர். அதில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் படுகாயமடைந்தார்.

கூடுதல் எஸ்பி செந்தில்குமார், காம்பவுன்ட் சுவரை தாண்டிக் குதித்து அந்த வீட்டுக்குள் சென்றார். அப்போது ஒரு தீவிரவாதி டியூப் லைட்டை எடுத்து  செந்தில்குமாரை தாக்கினான். அதில் அவர் காயமடைந்தார். அவரை போலீசார் உடனடியாக  சென்னைக்கு கொண்டு சென்றனர். போரூர்  மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு சிறிய அறுவைச் சிகிச்சை நடந்தது. அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். தீவிரவாதிகள்  தாக்குதலில் எஸ்ஐ ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளார்.

இதற்கிடையில், புத்தூரில் தீவிரவாதிகள் போலீசாருடன் சண்டையிட்டனர். தீவிரவாதிகள் துப்பாக்கியால் போலீ

ஆனாலும், வீட்டுக்குள் இருக்கும் தீவிரவாதிகள் கடைசி வரை சரணடைய மறுத்து விட்டனர். ‘வீட்டின் அருகே வந்தால், குண்டுகளை வைத்து  வீட்டையே தகர்த்து விடுவோம்’ என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் போலீசார் வீட்டுக்குள் செல்லவில்லை. வீட்டிற்குள் உள்ள 2 குழந்தைகள்,  பெண் மற்றும் படுகாயமடைந்தவர்களை வெளியே அனுப்பும்படி போலீசார் எச்சரித்தனர். அதற்கு தீவிரவாதிகள் சம்மதிக்கவில்லை. இதனால் ஆந்திரா  மாநில அதிரடிப்படையான ஆக்டோபஸ், தமிழக அதிரடிப்படையான கியூஆர்ட்டி போலீசார் வரவழைக்கப்பட்டு, வீட்டை சுற்றி வளைத்தனர்.

அதிகாலை 4 மணியில் இருந்து 8 மணி நேரமாக சினிமா பாணியில் நடந்த இந்த சண்டையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்  நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்ததால், ரயில்நிலையத்திலும் ஏராளமான பொதுமக்கள் கூடி விட்டனர். அந்த  தெருக்களிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டுக்குள் இருக்கும் தீவிரவாதிகளை சரணடையும்படி போலீசார் எச்சரித்தடி உள்ளனர்.  இல்லாவிட்டால் தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்து விட்டு தாக்குதலை நிறுத்தியுள்ளனர்.  பிற்பகலில் தாக்குதல் நடைபெறலாம்  என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சாரை சுட்டுள்ளனர். இந்த சண்டை பகல்  12 மணி வரை நீடித்தது. சண்டையின் போது ஒரு டிஎஸ்பி, தீவிரவாதிகளை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். அதில் பன்னா இஸ்மாயில் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தான். பிலால் மாலிக் படுகாயமடைந்து உயிருக்கு போராடியதாக கூறப்படுகிறது. அவனும் உயிர் பிழைக்க வழியில்லை என  போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment