Tuesday, October 22, 2013
இலங்கை::இலங்கையின் பாதுகாப்பு செலவீனம 1.95 பில்லியன் டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இராணுவ ரீதியான முன்னெடுப்புக்களை குறைக்குமாறு சர்வதேசத்தால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தின்படி 249 பில்லியன் ரூபாய்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் 2014 ஆம் ஆண்டுக்கான செலவீனமாக காட்டப்பட்டுள்ள 2.54 ரில்லியன் ரூபாய்களில் 14 சதவீதம் இராணுவம் மற்றும் பொலிஸாரின் செலவீனததுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட புலிகளை மீள இணைய விடாது தடுப்பதற்கு அதிகளவில் பாதுகாப்பிற்கு செலவிட நேரிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான மொத்த அரச செலவுகளில் 12 வீதம் பாதுகாப்பு மற்றும் காவல்துறைக்காக ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பி;க்க உள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பி;க்க உள்ளார்.

No comments:
Post a Comment