Pages

Monday, October 28, 2013

1,632 கி.மீ. தூரம் இந்தியா - தாய்லாந்து சர்வதேச நெடுஞ்சாலை!!

Monday, October 28, 2013
பாங்காக்::தாய்லாந்துக்கான இந்திய தூதர் அனில் வாத்வா கூறியதாவது:இந்தியா & மியான்மர் & தாய்லாந்து ஆகிய நாடுகளை இணைக்கும், 1,632 கிமீ தொலைவிலான சர்வதேச நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதன்மூலம் இந்திய & வங்கதேச நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மேம்படும். இந்தியா & மியான்மர் & தாய்லாந்து ஆகிய நாடுகளை இணைக்கும் ஆசிய பிராந்தியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த 1,632 கி.மீ சாலை பணிகள் வரும் 2015ம் ஆண்டுக்குள் முடிந்து போக்குவரத்து தொடங்கும்.

இந்திய தரப்பில் 1500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்காக மியான்மருக்கு இந்தியா 3 ஆயிரம் கோடி கடனாக கொடுத்துள்ளது. முழு சாலையிலும் இந்திய நாட்டின் சார்பில் 71 உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே வாரத்துக்கு 156 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் தாய்லாந்துக்கு கடந்த ஆண்டு இந்திய சுற்றுலா பயணிகள் 11.5 லட்சம் பேரும், தாய்லாந்து சுற்றுலா பயணிகள் 88 ஆயிரம் பேர் இந்தியாவுக்கும் வந்து சென்றுள்ளனர்.

tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment