Tuesday, October 8, 2013

ஸ்ரீநகர்: காஷ்மீரின் கேரான் செக்டரில் கடந்த 15 நாட்களாக பங்கரவாதிகளுக்கு எதிராக நடந்து வரும் என்கவுன்டர் குறித்து ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் இன்று ஆய்வு!

Tuesday, October 08, 2013
ஸ்ரீநகர்::கடந்த மாதம் சுமார் 40 பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லையில் உள்ள கெரன் பகுதி வழியாக இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து 15 நாட்களாக சண்டை நடந்துவந்தது. தற்போது இந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் சக்ரா கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவி இல்லாமல் இத்தகைய ஊடுருவல் நடந்திருக்க முடியாது என்றும் தொடர்ந்து

ராணுவம் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் இந்திய முகாம்கள் எதுவும் பயங்கரவாதிகளால் கைப்பற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளார்..

ஸ்ரீநகர்: காஷ்மீரின் கேரான் செக்டரில் கடந்த 15 நாட்களாக பங்கரவாதிகளுக்கு எதிராக நடந்து வரும் என்கவுன்டர் குறித்து ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் இன்று ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில், நல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தங்கி ஊடுருவி வந்துள்ளனர். அந்த இடத்தை தற்போது இந்திய ராணுவம் முடக்கி உள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நடந்து வந்த பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் தொடர் நடவடிக்கை காரணமாக, என்கவுன்டர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இது விரைவில் முடிவுக்கு வரும்,' என்றார்.

No comments:

Post a Comment