Tuesday, October 08, 2013
இலங்கை::இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டடுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம், 13 ஆவது திருத்தச் சட்டம், அதிகாரப் பரவலாக்கல், இந்திய வீடமைப்புத் திட்டம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் விரிவாக கலந்துயாடியதாக 13ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்நாட்டில் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அதிகாரம் பகிரப்படுவதற்கு உதவி புரிய வேண்டும்.
சிறுபான்மையினரின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றம் இந்திய வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கான பகிர்வு, அதிகாரப்பகிர்வு உட்பட பல விடயங்கள் பற்றி கலந்துபேசினோம்.
கட்சியின் அரசியல் நிலைப்பாடு கொள்கைகள் என்பன விளக்கப்பட்டன. சந்திப்பு மிகவும் சாதகமாக அமைந்தது. மற்றும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் கட்சி அடைந்துள்ள வெற்றி என்பன எடுத்து விளக்கப்பட்டன. மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட கூடடாது என்ற எமது நிலைப்பாட்டினையும் தெரிவித்தோம்.
இந்திய வீடமைப்புத் திட்டத்தில் சில மாவட்டங்கள் விடுபட்டுள்ளதையும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதையும் கூறினோம். இந்திய வீடமைப்புத்திட்டம் வட மாகாணத்தில் அரசியல் பாகுபாடின்றி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டோம் என ஸ்ரீலங்கா காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்
இந்திய வெவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய – இலங்கை நட்புறவு தொடர்ந்தும் பேணப்படும். முஸ்லிம் காங்கிரஸுடன் மிகவும் சினேகபூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார்.
கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற இச்சந்திப்பில் நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி மேலும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், ஹரீஸ், தௌபீக், அஸ்லம், முத்தலிப் பாவா பாரூக் , பிரதிப் பொதுச் செயலாளரும் கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment