Thursday, October 17, 2013
இலங்கை::வவுனியாவிலுள்ள சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் துஷ்பிரயோகம்; விசாரணைகள் ஆரம்பம்! அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பகுதியில் 12 வயது சிறுவன் தற்கொலை; விசாரணைகள் ஆரம்பம்!
வவுனியாவிலுள்ள சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
இதேவேளை, துஷ்பிரயோகத்திற்கு இலக்கான சிறுவன் உள்ளிட்ட 22 சிறுவர்கள் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு நேற்று அழைத்துவரப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த சிறார்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த 22 பேரில் துஷ்பிரயோகத்திற்கு இலக்கான வேறு சிறுவர்கள் இருக்கின்றார்களா என்பதை கண்டறிவதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் 10 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பகுதியில் 12 வயது சிறுவன் தற்கொலை; விசாரணைகள் ஆரம்பம்!
அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமது தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட அக்கரைப்பற்று நீதவான், பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment