Sunday, October 6, 2013

ஆஸி.,க்கு அனுப்புவதாக இலங்கை அகதிகளிடம் ரூ.12 லட்சம் மோசடி: மூன்று பேர் கைது!

Sunday, October 06, 2013
திண்டுக்கல்::ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளை அனுப்புவதாக கூறி, ரூ.12 லட்சம் மோசடி செய்த 3 பேரை, "கியூ' பிரிவு போலீசார் கைது செய்தனர்.
 
திண்டுக்கல், கே.புதுக்கோட்டை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் சுகுந்தன்,33, ரமேஷ்குமார்,35. பெயின்டர் வேலை செய்து வந்த இவர்களும், மதுரை அருண்,20, என்பவரும், சென்னை உட்பட பல்வேறு முகாமை சேர்ந்த அகதிகளிடம், ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வாங்கி தருவதாக, கூறியுள்ளனர். இதை நம்பிய 12 பேர், தலா ரூ.1 லட்சம் வீதம், ரூ.12 லட்சம் கொடுத்துள்ளனர்.
 
இவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லாததால், பணம் கொடுத்தவர்கள், சென்னை "கியூ' பிரிவு போலீசில் புகார் செய்தனர். திண்டுக்கல் "கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான, தனிப்படை போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். அவர்களில் சுகுந்தன், ரமேஷ்குமாரை, சென்னை புழல் சிறையிலும், அருணை மதுரை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

No comments:

Post a Comment