Tuesday, September 17, 2013

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.ஜ., விற்கு தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும்: பா.ஜ.வின் தமிழ் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்!

Tuesday, September 17, 2013
சென்னை::2014-ல் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் இப்போதே பிரபலங்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடிகர், நடிகைகளை தங்கள் பக்கம் இழுப்பதில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டனர்.
 
முதல்படியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.ஜ., விற்கு தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.வின் தமிழ் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக கூறியுள்ளார்.
 
பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பா.ஜ.வின் மாநாடு திருச்சியில் இம்மாதம் செப்.,26ம் தேதி நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் பங்கேற்கும் முதல் பிரசாரக்கூட்டம் இதுவாகும்.
 
இதனால் தமிழகத்தில் மாநாட்டிற்கான வேலைகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மாநாட்டு வேலைகள் தொடர்பாக திருச்சிக்கு வந்திருந்தார் பொன் ராதாகிருஷ்ணன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி அரசியல் முடிவு எடுக்கும் நேரம் வந்துவிட்டது. அவர் பா.ஜ.வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். பா.ஜ.,வுக்கு உதவி செய்ய ரஜினிக்கு இதுவே சரியான தருணம் என்றும், மோடியைப் பற்றி நம்மை விட அதிகம் தெரிந்தவர் ரஜினி, அவர் திறமையை உணர்ந்தவர் ரஜினி. எனவே அவர் மோடிக்கு ஆதரவாகப்பிரச்சாரம் செய்ய வரவேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment