Pages

Wednesday, September 18, 2013

வடமாகாண சபைத் தேர்தலில் வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டாலும் வாக்களிக்கலாம்!

Wednesday, September 18, 2013
இலங்கை::வடமாகாண சபைத் தேர்தலில் உங்களுக்குரிய வாக்காளர் அட்டை இது வரையில் கிடைக்கவில்லையா? அப்படிக் கிடைக்காவிட்டாலும் கூட உங்கள் தேசிய அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்க முடியும்.
 
தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் தற்காலிக அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரம், கடவுச்சீட்டு, முதியோர் அ. அட்டை, ஓய்வூதிய அ.அட்டையுடனும் சென்று வாக்களிக்கலாம்.
என்று அறிவித்துள்ளார் வடமாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்.
 
எதிர்வரும் சனிக்கிழமை வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறும் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலின் பிரகாரமே இந்தத் தேர்தல் இடம்பெறவுள்ளது. நேர காலத்துடன் ஒதுக்கப் பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment