Pages

Wednesday, September 18, 2013

கந்தளாய் சிவில் பாதுகாப்பு குழுக்களின் நிர்வாக பிரதிநிதிகளுக்கான விஷேட செயலமர்வு!

Wednesday, September 18, 2013
இலங்கை::ஆசியா மன்றத்தின் அனுசரனையில் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கந்தளாய் தலைமைப் பொலிஸ் - சமூக பொலிஸ் பிரிவின் பங்கேற்புடன் கந்தளாய் பிராந்தியத்துக்கு உட்பட்ட ஹோமரங்கடவெல,தம்பலகாமம, மொரவௌ, கந்தளாய், ஆகிய பிரதேச சிவில் பாதுகாப்பு குழுக்களின் நிர்வாக பிரதிநிதிகளுக்கான விஷேட செயலமர்வொன்று  கந்தளாய் பரமேசுவரா மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைமைப் பிரதிநிதிகள் சுமார் 750 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 69 கிராம நிலதாரி பிரிவிலுள்ள மூன்று சமூகங்களையும் சேர்ந்த பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். கிராமங்களில் அன்றாடம் நடைபெறும் குற்றச்செயல்கள் அடிப்படைப் பிரச்சினைகள்,தேவைகள் தொடர்பான விளக்கப்படங்களுடன் கலந்துரையாடப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
கந்தளாய் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு. நிமல் பண்டார அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக திருகோணமலை பிரதி பொலிஸ் மா அதிபர் கபில விஜேசேகர அவர்களும் விஷேட அதிதியாக கந்தளாய் பிராந்திய பொலிஸ் அதிகாரி திரு.நுவான் அத்துகோரல அவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜயந்த விஜேசேகர மற்றும் ஆசியா மண்றத்தின் சமூக பொலிஸ் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் தவராஜா உமேஷ் அவர்களுடன் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் திட்ட உத்தியோத்தர் எம்.எஸ்.எம்.இர்பான் அவர்களும் மற்றும் இன்னும் பல அரச உத்தியோகத்தர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment