Pages

Sunday, September 15, 2013

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

Sunday, September 15, 2013
இலங்கை::புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்திய போது அவர் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியமை அம்பலமாகியுள்ளது.
 
அந்த நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிவசம்பு நாகேந்திரன் எனப்படும் குறித்த நபர், தற்போது கம்பஹா மாவட்டத்தில் கடமையாற்றி வரும் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப்பேணி வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
 
பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் போதைப் பொருள் கடத்தியதாகவும் புலிகளுக்கு நிதி திரட்டியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.
பிரதேச அரசியல்வாதி ஒருவருக்கும் குறித்த நபர் பணம் வழங்கி ஆதரவினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
 
2006ம் ஆண்டு முதல் இவர் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
நில்மினி ரத்னகுமாரி என்ற சிங்களப் பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
புலிகளுக்காக படகுகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை நாகேந்திரன்
கொள்வனவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment