Pages

Wednesday, September 18, 2013

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பேச்சுவார்த்தை!

Wednesday, September 18, 2013
இலங்கை::இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
 
எதிர்வரும் வெள்ளிக்கிழமை டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளினது வெளிவிவகார அமைச்சர்களுடன் குர்ஷித் சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளார்.
 
அவுஸ்திரேலியா, ஈரான், ஓமான், சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. இந்து சமுத்திரரிம் பேரவையின் மாநாட்டில் பத்தொன்பது நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் அதிகாரிகளும் அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.
 
கடற்கொள்ளை, மீன்பிடித்துறை, சுற்றுலாத்துறை, கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் குறித்த நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள இந்த அமர்வுகள் வழியமைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
 

No comments:

Post a Comment