Pages

Wednesday, September 18, 2013

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவனீதம் பிள்ளை நியாயமான அறிக்கையை சமர்ப்பிப்பார்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Wednesday, September 18, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பருவகால கூட்டத்தொடரில் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை நியாயமான அறிக்கையை சமர்ப்பிப்பார் என நம்புவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ஜனாதிபதி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்கள் அனைத்தும் இலங்கை போன்ற பலவீனமான நாடுகள் மீது பிரயோகிக்கப்படுவதற்காக, பலம்வாய்ந்த, பெரிய நாடுகளால் உருவாக்கப்படுவதாக இந்த செவ்வியில் ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
இந்த நடைமுறை புதுப்பிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது பதிலளித்துள்ளார்.
 
இராணுவத்தினர் தேர்தலில் பங்கேற்றவில்லை எனவும், அவர்கள் வெறும் பாதுகாப்பையே வழங்குகின்றார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான உறவுகளை சிறந்தமுறையில் பேணுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியாவிற்கு எதிராக செயற்படுவதற்கு இலங்கை எந்தவொரு நாட்டையும் அனுமதிக்காது எனவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment