Pages

Monday, September 16, 2013

கிளிநொச்சியில் அரசினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நேரில் விஜயம்!

Monday, September 16, 2013
இலங்கை::தற்காலிக அரசியல் இலாபத்திற்காக மக்களின் வாழ்க்கையை பணயம் வைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
 
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்திற்கு தெரிவான சிலர், தற்காலிக அரசியல் இலாபத்திற்கு இனவாதத்தினை தூண்டுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
 
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பொன்றில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
 
வடக்கு மக்களுக்காக இருப்பதாக தெரிவிக்கும் சில அரசியற் தலைவர்கள் தமது பிள்ளைகளின் கையில் விளையாட்டு துப்பாக்கியை கூட வழங்கவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதத்தினால் அப்பாவி மக்களின் பிள்ளைகளே காவு கொள்ளப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
 
நாட்டின் அபிவிருத்தியை குழப்புவதற்கோ, மக்களின் எதிர்பார்ப்புகளை கெடுப்பதற்கோ எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
வீதிகளை அமைத்து,  மின்சார கட்டமைப்பை சீர்செய்து நாம் எதனை எதிர்பார்கின்றோம்.  வரத்தகர்கள் இந்தப் பகுதிகளுக்கு வருகை தர தந்து தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.  அதன்போது தொழில்வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அந்தத் திட்டங்களையே நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். 
 
இதன்போது மக்களின் தேவைகள் திருப்பமடையும், என்பதனால் தற்போதைய அபிவிருத்திகளை செவ்வனே முன்னெடுத்து செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய மாகாண சபை நிர்வாகமே அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதவிர, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலமாக வந்தவர்கள் தனியான ராச்சியத்தின் அவசியம் குறித்து பேசுகின்றமை தம்மை ஆச்சரிமடைய வைப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
 
மாகாண சபையொன்று, தனி இராஜ்ஜியம் ஒன்றை கோருவதற்கு தயாரானால் அல்லது மற்றுமொரு பேராட்டத்தை ஆரம்பிக்கும் தேவை ஏற்படால், அல்லது நாம் தனியான ஓர் குழுவை உருவாக்குவதாக கூறினால் அங்கு அராங்கத்திற்கும் மாகாண சபைக்கும் இடையே பிரச்சைகள் உருவெடுக்கும்.  அது அபிவிருத்தியை முடக்கும் செயற்பாடுகளே.  மக்களின் தேவைகளை மறு திசைக்கு திருக்கும் நடைமுறையாகும்.)
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களெனக் கூறிக் கொள்வோரின் பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்பதோடு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால், தமிழ்க் கூட்டமைப்பினர் இங்கு வசிக்கும் அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலிக்கடாக்களாக்க முயல்கின்றனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்களின் பிள்ளைகள் எவராவது யுத்தத்தில் இறந்திருக் கிறார்களா? யுத்தத்தில் அங்கவீனம் உற்றிருக் கிறார்களா? அல்லது காயமடைந்திருக்கிறார்களா? துப்பாக்கியொன்றை ஏந்தியிருக்கிறார்களா? ஆகக் குறைந்தது விளையாட்டுத் துப்பாக்கி யொன்றையாவது அவர்களது கையில் கொடுத்திருப்பார்களா?
தலைவர்களின் பிள்ளைகள் எல்லோரும் படிப்பது இங்கிலாந்தில் அல்லது கனடாவில், இந்தியாவில், பிரான்ஸில். இந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலிக் கடாக்களாக்கி அவர்களது பிள்ளைகளுக்கு சொகுசு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கிறார்கள். இதனாலேயே இன்று எமது அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலியாக்க முயல்கிறார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முல்லைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்று நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் வடமாகாணசபைத் தேர்தலுக்குப் பொறுப்பான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர்களான ரெஜினோல்ட் குரே, டியூ குணசேகர, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ்
பாரூக், பிரபா கணேசன், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
 
இக்கூட்டத்தில், புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் லெப்டினன்ட் கேணலாகவிருந்த இளந்தென்றல் என அழைக்கப்பட்ட தெய்வேந்திரன் ரகுணந்தன் தலைமையிலான முன்னாள் புலி உறுப்பினர்கள் 7 பேர் ஜனாதிபதி அவர்களிடம் வெற்றிலையைக் கொடுத்து ஆளும் கட்சியில் இணைந்துகொண்டனர்.
 
இப்பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்:-
 
உங்கள் பகுதிப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்த்துவைக்கப்படுகின்றன. வீதி அபிவிருத்தி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஒவ்வொன்றாக செய்துவருகிறோம். கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. இன்னமும் உங்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அவை என்னவென்பது எமக்குத் தெரியும். வீடு மற்றும் காணிப்பிரச்சினைகளே அவை. இது உங்களுக்கு மட்டும் உள்ளவொரு பிரச்சினையல்ல. நான் ஹம்பாந்தோட்டைக்குச் சென்றாலும் அங்குள்ள மக்கள் முன்வைக்கும் பிரச்சினையும் இதுதான். தனக்கென ஒரு வீடு, தனக்கென ஒரு காணி வேண்டும் என்பது இந்த நாட்டிலுள்ள சகலரினதும் அடிப்படை பிரச்சினைதான்.
 
இதனைத் தீர்ப்பதற்கு நாம் ஒரு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தனக்கென ஒரு காணியில் தனக்கென ஒரு வீட்டை நிர்மாணித்துக்கொள்ளும் நிலையை ஒவ்வொருவருக்கும் பெற்றுக்கொடுக்கும் விதத்தில் அதற்கான சாத்தியவளக் கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து கொண்டு இருக்கின்றோம். நான் இங்கே நடந்துமுடிந்த யுத்தம் பற்றிப் பேசுவதற்கு வரவில்லை.
பேசப்போவதுமில்லை. நீங்கள் அந்த யுத்தத்துக்கு முகங்கொடுத்தவர்கள். அதற்குள் வாழ்ந்தவர்கள் அதன் கொடூரம் என்ன என்பது உங்களுக்கு தெரியும்.
யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் தான் ஆகின்றன. உங்களது பிள்ளைகள் இளைஞர்கள், யுவதிகள் கல்வியை மேற்கொள்ளவேண்டியது மிக மிக அத்தியாவசியமானது.
 
மிக விரைவாக அவர்களுக்கு கல்வியைப் பெற்றுக்கொடு ங்கள். பிள்ளைகள் கற்கும்போது அவர்களுக்கு வேலைவாய்ப் புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, தொழிற்பயிற்சிக ளைப் பெற்றுக்கொள்வதற்கு அதற்கான வழிவகைகளும் செய்யப்படும். வீதி அபிவிருத்தி செய்வதன் ஊடாக இந்தப் பகுதிகளுக்கு முதலீட்டாளர்கள் புதிய தொழில்முயற்சியாளர்கள் வந்து, புதிய தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கவும், அதன் ஊடாக உங்கள் பகுதி பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு, தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு சமூக மயமாக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நாட்டில் ஒரே சமூகமாக ஒரே மக்களாக வாழவேண்டும் என்ற ஒரு கடமையும், பொறுப்பும் எம் எல்லோருக்கும் இருக்கிறது.
 
வடக்கில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினோம். பொதுத் தேர்தலை நடத்தினோம். உள்ளூராட்சி தேர்தலை நடத்தினோம். இப்போது மாகாணசபைத் தேர்தலையும் நடத்துகிறோம். இவை அனைத்தும் மக்களின் நலனுக்காக அரசுடன் இணைந்துதான் செயற்பட வேண்டும். மாகாணசபை ஒன்று தனியான நாடொன்றைக் கோர முற்பட்டால் தனியான போராட்டத்தை ஆரம்பித்தால் தாம் தனியான குழுவாகச் செயற்படுவோம் என்று கூறினால் அரசுக்கும் மாகாணசபைக்கும் இடையே மோதல்தான் ஏற்படும்
 
அபிவிருத்திகள் தடைப்படும். மக்களின் தேவைகள் பின்னோக்கிச் செல்லும். ஆகவே, தற்போதுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மாகாணத்துக்குக் கிடைக்கின்ற நன்மைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு தடையாக அமையும். இணங்கிச் செல்லக்கூடிய, இணைந்து செயற்படக்கூடிய மாகாணசபை ஒன்றுதான் தேவைப்படுகிறது.
ஜனநாயக ரீதியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்று கிடைத்த அனைத்தையும் பின்னோக்கிச் செல்வதற்கு, தமக்குக் கிடைக்கும் தற்காலிக நன்மைகளைக் கருதி மக்களின் உணர்வுகளையும் இனவாதத்தையும் தூண்டிவிட முயற்சிப்பது மிகவும் தவறானது என்பதுதான் என்னுடைய கருத்து.
 
நாங்கள் இருக்கும்வரை எமது அரசு இருக்கும்வரை இந்த நாட்டைத் துண்டாட முடியாது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவ ர்களின் பிள்ளைகள் எவராவது யுத்தத்தில் இறந்திருக்கிறார்களா? யுத்தத்தில் அங்கவீனம் உற்றிருக்கிறார்களா? அல்லது காயமடைந்திருக்கிறார்களா? துப்பாக்கியொன்றை ஏந்தியிருக்கிறார்களா? ஆகக் குறைந்தது விளையாட்டுத் துப்பாக்கியொன்றையாவது அவர்களது கையில் கொடுத்திருப்பார்களா?
அதனால் பொய்யான பிரசாரங்களுக்கு ஏமாறவேண்டாம். இனவாதிகளுக்கு ஏமாறாமல் நீங்கள் எங்களுடன் கைகோர்த்துக்கொண்டு ஒரே சகோதரர் போன்று இணைந்து சகல இன மக்களும் ஒன்றிணைந்து உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் உங்களுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டும் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
 
கிளிநொச்சியில் அரசினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று நேரில் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள சிறுவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்றைய தினம் வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் செஞ்சோலைக்கும் சென்றிருந்தார்.

இதன்போது செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வாழும் சிறுவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள் அங்குள்ள தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு நவீனவசதிகளை பெற்றுக் கொடுப்பது, பௌதீக வளங்களை வளப்படுத்துவது மற்றும் அங்குள்ள சிறுவர்களது நலன்சார்ந்த விடயங்களை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

செஞ்சோலை சிறுவர்கள் அங்கு வந்த ஜனாதிபதி அவர்களை வரவேற்றதுடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து ஆனந்தக் குதூகலித்தனர்.

இதன்போது  கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, செஞ்சோலை நிர்வாகி குமரன் பத்மநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



 

No comments:

Post a Comment