Pages

Monday, August 12, 2013

கிளிநொச்சி அறிவியல் நகரில் இலங்கை மத்திய வங்கியின் உத்தேச வடமாகாண அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில்: பசில் ராஜபக்ஷ!

Monday, August 12, 2013
இலங்கை::கிளிநொச்சியில் மத்திய வங்கியின் பிராந்திய காரியாலயம் அமைக்கப்படுவதன் ஊடாக இப்பகுதி பொருளாதார கேந்திர நிலையமாக விரைவில் மாற்றம் பெறுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டம் தற்போது பல பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொண்டு முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கடந்த யுத்த காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மக்களின் வாழ்வு நிலை இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.  இந்நிலையில் இங்கு பல்வேறு உட்கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டம் உள்ளிட்ட வடபகுதியின் பொருளாதார அபிவிருத்தி செயற்திட்டங்களை மேலும் முன்னெடுப்பதற்கு நிர்மாணிக்கப்படவுள்ள இவ் அலுவலகம் அனுகூலமாக அமையுமென்பதுடன் கிளிநொச்சி பொருளாதார கேந்திர நிலையமான மாற்றம் பெறுமென்றும் சுட்டிக்காட்டினார். 

இதில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி உரையாற்றும் போது, கடந்த நான்கு ஆண்டுகளில் வடமாகாணம் துரித அபிவிருத்தியை கண்டுள்ளது. அதற்கு மத்திய வங்கியின் உறுதுணை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் கிளிநொச்சி வர்த்தக மையமாக மாற்றம் பெறும் வகையில் சகல பொருளாதார முகவர்களும் இப்பிராந்திய அலுவலகத்தின் ஊடாக இணைந்து செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.  

இலங்கை மத்திய வங்கியின் உத்தேச வடமாகாண அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இன்றைய தினம் உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment