Pages

Wednesday, August 28, 2013

ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் துப்பாக்கிச் சூட்டில் சர்வதேச மீட்புப் குழுவினர் உட்பட 12 பேர் பலி!

Wednesday, August 28, 2013
காபூல்::ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக ஆரம்பித்த நாள் முதல் தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி வருகிறது. 1988ம் ஆண்டு முதல் சர்வதேச மீட்புப் குழு ஊழியர்கள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமைதியை நிலைநாட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 6 பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான்கள் கடத்திச் சென்று விட்டனர்.

அவர்களை விடுவிக்க ஐ.நா. அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டி பேரம் பேசிய தலிபான்கள், பேரம் படியாததால் அவர்கள் 6 பேரையும் சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்டவர்களின் பிரேதங்கள் குல்ரன் மாவட்டத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்டன. இதேபோல், படிகா மாகாணத்தில் 6 பிரேதங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.

இந்த படுகொலைகளுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. சபையின் அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச மீட்புப் குழுவும் இந்த படுகொலைகளை கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட சர்வதேச மீட்புப் குழுவின் தலைவர் ஜார்ஜ் ருப், 'ஆப்கானிஸ்தானை பாதுகாப்பான நாடாக மாற்ற பாடுபட்ட சர்வதேச மீட்புக் குழுவின் ஊழியர்கள் 6 பேரை தலிபான்கள் ஈவிரக்கமின்றி கொன்றது போர்க் குற்றத்துக்கு ஒப்பான செயல்.

இதனை கண்டிக்கும் வகையில் எங்கள் குழுவின் மீட்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.
காபூல்::ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக ஆரம்பித்த நாள் முதல் தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி வருகிறது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment