Pages

Monday, July 1, 2013

எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா: இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது!

 
Monday, July 01, 2013
இலங்கை::எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக்  (புலி)கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்த இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
 
நேற்று கூடிய கட்சியின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர்கள் ஒருமித்த முடிவாக மாவை சேனாதிராசாவை முன்னிறுத்த தீர்மானித்ததாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
 
இன்று திங்கட்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலின் வேட்பாளர் தெரிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் யாழ். கிளையில் நடைபெற்றது.
 
இதன்போது, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனதிராசாவை நிறுத்துவதற்கு யாழ். கிளை தீர்மானித்துள்ளது.
 
அத்துடன் இந்த தேர்தல் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி நடைபெறுவதால் வேட்பாளர்கள் தெரிவு அந்தந்த மாவட்ட காரியாலயங்கள் ஊடாக நடைபெறவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் வேட்பாளர் தெரிவினில் அவ்வவ் மாவட்டங்களினில் நிரந்தரமாக வசிப்பவர்களிற்கே சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டுமென தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
குறித்த மூன்று தீர்மானங்கள் தொடர்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு பதிவுத் தபால் மூலம் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சீ.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment