Monday, July 01, 2013
இலங்கை::மீனவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் எரிபொருள் மானியம் தவறான முறையில் கையாளப்படுவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மோசடியான முறையில் எரிபொருள் மானிய அட்டைகள் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் மானிய அட்டைகளை தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு ஐயாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய மீன்பிடி துறைமுகங்களில் மாத்திரம் எரிபொருள் மானியத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தியதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனால் மீனவர்களுக்கான எரிபொருள் மானியத்தைக் கடந்த மாதம் 308 மில்லியன் ரூபாவிலிருந்து 265 ரூபா வரை குறைத்துக்கொள்ள முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீன்பிடித் துறைமுகங்களில் எரிபொருள் மானியம் விநியோகிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் மோசடியில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் கிடையாது என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment