Monday, July 1, 2013

இலங்கை முகாமிலிருந்த 4 தமிழக மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு!

Monday, July 01, 2013
ராமேசுவரம்::கடந்த ஜுன் மாதம் 26-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் ஜாக்சன், ஐஸ்டின் உள்பட 4 பேர் சென்ற படகில் பழுது ஏற்பட்டதால் 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்து வந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு இலங்கை முகாமில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், அந்த 4 மீனவர்களையும் இன்று இலங்கை கடற்படை சர்வதேச எல்லையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் இன்று மாலை கரைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment