Pages

Friday, July 5, 2013

13ஆவது திருத்தச் சட்ட விவகாரம் இலங்கையின் உள்நாட்டு விவகாரமாகும். இது இலங்கையர்களாலேயே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்: பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

Friday, July 05, 2013
இலங்கை::13ஆவது திருத்தச் சட்ட விவகாரம் இலங்கையின் உள்நாட்டு விவகாரமாகும். இது இலங்கையர்களாலேயே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து இந்தியாவின் புதிய தூதுவருடன் நான் பேசியுள்ளேன். இந்த விவகாரத்தால் எமது உறவுகள் ஒருபோதும் பாதிப்படையமாட்டாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, அல்லது ஐரோப்பிய ஒன்றியம் உட்பட எந்தவொரு நாட்டினதும் அழுத்தம் காரணமாக எமது நாட்டின் எதிர்காலத்தைத் தாரைவார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்..
 
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட இலங்கை பாதுகாப்பு பிரிவின் முக்கியஸ்தர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்டமை தொடர்பிலான சம்பவம் குறித்து புலனாய்வுப்பிரிவு விசாரணை!
 
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட இலங்கை பாதுகாப்பு பிரிவின் முக்கியஸ்தர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்டமை தொடர்பிலான சம்பவம் குறித்து புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கை பாதுகாப்பு பிரிவின் முக்கியஸ்தர்களின் தொலைபேசிகள் குறிப்பிட்ட ஒரு தரப்பினரால் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் இலங்கை புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்ததையடுத்து அவ்விடயம் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புவெல நேற்று வியாழக்கிழமை ஊடக அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment