Monday, June 3, 2013

வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்: தெற்கில் கையெழுத்து வேட்டை!

Monday, June 03, 2013
இலங்கை::வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மகஜர் ஒன்றில் கையெழுத்து பெறும் மாபெரும் நடவடிக்கையொன்று தெற்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

களனி தர்மாயதன நிலையத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்த இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கையில் தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணியின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர் முதல் கையெழுத்திட்டார்.

அதனைத் தொடர்ந்து மகா சங்கத் தேரர்கள், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலரும் மேற்படி மகஜரில் கைச்சாத்திட்டனர்.

இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கையானது நாட்டுக்காகச் செய்யும் மாபெரும் சேவை என்றும் நாடு பூராகவும் சென்று வட மாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக கையெழுத்து பெற்று அதனை ஜனாதிபதியிடம் கையளிப்பதே தங்களது நோக்கம் என்றும் தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணியின் தலைவர் கூறினார்.

No comments:

Post a Comment