Monday, June 3, 2013

இலங்கையில் சீதைக்கு கோயில் : ம.பி. முதல்வர் சவுகான் அறிவிப்பு!!

Monday, June 03, 2013
குவாலியர்::மத்திய பிரதேசத்தில் மூன்றாவது முறையாக பாஜ ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதா தேவிக்கு கோயில் அமைக்கப்படும் என முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதற்கு பிரசார வியூகங்கள் வகுப்பதற்காக முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் மாநில பாஜ தலைவர்களின் 3 நாள் மாநாடு நேற்று குவாலியரில் தொடங்கியது. இதில் சவுகான் பேசியதாவது: பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதா தேவிக்கு கோயில் கட்டப்படும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ம.பி. வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் இதுதொடர்பாக பேசியுள்ளேன். இலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதா தேவி தனது கற்பை நிரூபிக்க அக்னி பரீட்சையில் இறங்கினார். இந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்ட இலங்கை அதிபரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இவ்வாறு சவுகான் பேசினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என தேசிய அளவில் பாஜ பிரசாரம் செய்து வரும் வேளையில் அவரது மனைவி சீதாவுக்கு கோயில் கட்டப்படும் என மாநில அளவில் பாஜ முதல்வர் சவுகான் பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment