Pages

Thursday, June 13, 2013

கத்தோலிக்க திருச்சபைக்கு பிரிவினைவாத சக்திகளுடன் எவ்விதமான கொடுக்கல் வாங்கல்களோ, தொடர்புகளோ இல்லை: இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது!

Thursday, June 13, 2013
இலங்கை::கத்தோலிக்க திருச்சபைக்கு பிரிவினைவாத சக்திகளுடன் எவ்விதமான கொடுக்கல் வாங்கல்களோ, தொடர்புகளோ இல்லை எனவும்  நாட்டின் சுதந்திரம், நல்லிருப்பு, ஐக்கியமான நாடாக முன்னோக்கி செல்ல வேண்டிய தேவையை உணர்ந்தே 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது அநாவசியமானது என கூறியதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
 
13வது  அரசியல் அமைப்புத் திருத்தம் சம்பந்தமான குறைப்பாடுகளை திருச்சபை அவதானிப்பதாகவும் எனினும் நாட்டின் எதிர்கால இருப்புக்கு இதன் மூலம் ஏற்படும் அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் கதிர்னால் உள்ளிட்ட ஆயர்கள் குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக  தேசிய  கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளரும் கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளருமான பொனடிக் ஜோசப் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
 
இலங்கை எதிர்பார்த்துள்ள இலங்கை வெற்றிக்கொள்ளவும் நாட்டின் ஐக்கிய சகவாழ்வு தொடர்ந்தும் இருக்க வேண்டுமாயின் ஒருவிதமான நடுநிலையான கொள்கை அவசியமானது.  இலங்கை வரலாற்றை நோக்கும் போது, இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது நாட்டு பிரச்சினைகளில் தமது நிலைப்பாட்டை தெளிவாகவும் நடுநிலையாக வெளிப்படுத்தி வந்துள்ளது.  இதன் போது பல நபர்கள், அமைப்புகள் திருச்சபை மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
 
போர் நடைபெற்ற காலத்தில் கத்தோலிக்க திருச்சபை இவ்வாறான குற்றச்சாட்டை எதிர்நோக்கியது. நாட்டின் சுதந்திரம், நாட்டின் நன்மையை கருத்தில் கொண்டே இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை 13வது அரசியல் அமைப்புத் திருத்தம்  இந்த தீர்மானத்தை எடுத்தது.  அந்த திருத்தச் சட்டத்தில் குறைப்பாடுகள் இல்லை என திருச்சபை கூறவில்லை.  எனினும் கடந்த 20 வருடங்கள் இந்த திருத்தச் சட்டத்துடன் இலங்கை, நாடு என்ற வகையில்  முன்னோக்கி சென்றுள்ளது.
 
குறைகளை முகாமைத்துவம் செய்து,  நாட்டின் இருப்புக்காக மோதல்கள் ஏற்படுவதை தவிர்ப்பதன் அவசியம், மக்கள் தமது வழமையான வாழ்க்கையை உரிய முறையில் நடத்தி செல்லவதற்காக வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதன் அவசியத்தை கவனத்தில் கொண்டே கத்தோலிக்க திருச்சபை தனது நிலைப்பாட்டை அறிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment