Pages

Friday, June 14, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் ஊடாக இலங்கை நிலைமைகளை பார்வையிட முடியும்: நியூசிலாந்து!

Friday, June 14, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் ஊடாக இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட சர்வதேச சமூகத்திற்கு சந்தர்ப்பம் கிட்டும் என நியூசிலாந்து அறிவித்துள்ளது. மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேரடியாக பார்வையிட முடியும் என நியூசிலாந்து பிரதமர் வெளிவிவகார அமைச்சர் முரே மெக்யுலி தெரிவித்துள்ளார்.
 
வடக்கில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் திருப்தி அடையக் கூடிய தீர்வுத் திட்டங்கள் இன்மும் முன்வைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் வட மாகாணசபை தேர்தல் நடத்துவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment