Pages

Thursday, June 27, 2013

வெள்ளை மாளிகையில் புகுந்த பெண் தீவிரவாதி? அமெரிக்காவில் பரபரப்பு!!

Thursday, June 27, 2013
வாஷிங்டன்::அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பையும் மீறி புகுந்த பெண்ணை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர். இவர் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உடையவரா என்று தீவிர விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் அரசு பணிகளை கவனித்து வருகிறார். இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகையின் சுவர் ஏறி குதித்து பெண் ஒருவர் அத்துமீறி உள்ளே புகுந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள், பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கொலம்பியா போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு பிரிவு செய்தி தொடர்பாளர் கூறுகையில், வெள்ளை மாளிகை அருகே பெண் உள்பட 17 பேர் நேற்று பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவரை விடுவிக்க கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் ஒரு பெண் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அந்த நேரத்தில் அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இல்லை. அந்த பெண் ஆரஞ்சு கலர் உடை அணிந்திருந்தார். அவரது பெயர் டயானி வில்சன் என்பதும் சிறையில் இருந்தவர் என்பதும் தெரிய வந்தது. கைதான பெண் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உடையவரா என்று விசாரணை நடக்கிறது என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment