Pages

Monday, June 17, 2013

கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் : குடிநீர் கொடுத்த இலங்கை கடற்படை!!

Monday, June 17, 2013
ராமேஸ்வரம்::நடுக்கடலில் படகில் தத்தளித்த, ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர், மீட்கப்பட்டனர்.ராமேஸ்வரத்தில் இருந்து, ஜூன் 12ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தங்கராஜ், நம்புச்சாமி, ஜெயபால், நாகராஜ் ஆகிய மீனவர்கள், மறுநாள் கரை திரும்பவில்லை. படகில் இயந்திரக் கோளாறால், கச்சத்தீவு தாண்டி, படகை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினர். இவர்களை, தேடிச் சென்ற மீட்புக் குழு, சூறாவளி காற்றால், கரை திரும்பினர்.
 
இந்த நிலையில், மற்றொரு மீட்புக் குழு, நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டனர்.கரை திரும்பிய மீனவர்கள், கூறியதாவது:இரண்டு தினங்களாக, கடலில் பரிதவித்தோம். பிடித்து வைத்திருந்த நண்டு, கணவாய் மீனை சமைத்து சாப்பிட்டு, பசியாறினோம். அப்போது, இலங்கைக் கடற்படையினர் வந்து விசாரித்தனர். குடிக்க கேனில் தண்ணீர் கொடுத்து, படகை கயிறால் கட்டி, கச்சத்தீவு அருகே விட்டுச் சென்றனர். அதன்பின்தான், மீட்புக் குழுவினர், எங்களை மீட்டனர்.இவ்வாறு, மீனவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment