Pages

Thursday, June 13, 2013

முடிந்தால் காத்தான்குடியில் கசினோ நிலையத்தை அமைத்துக்காட்டு: அரசாங்காம்யிடம் பொதுபல சேனா சவால்!.

Thursday, June 13, 2013
இலங்கை::கொழும்பில் கசினோ சூதாட்ட மத்திய நிலையத்தை அமைக்கும் அரசாங்கம் முடிந்தால் காத்தான்குடியில் நிலாவெளியில் திருகோணமலையில் கசினோ சூதாட்ட நிலையத்தை அமைத்துக்காட்ட வேண்டுமென சவால் விடுக்கின்றோம்.
 
இரண்டு சட்டம் நாட்டில் இன்று இரண்டு விதமான சட்டம் அமுலில் உள்ளது. அம்பாறையில் மோட்டார் சைக்கிள் செலுத்துவோர் ஹெல்மட் அணிய வேண்டும் ஆனால் காத்தான்குடியில் ஹெல்மட் அணியத் தேவையில்லை ஏன் இந்த இரண்டு விதமான சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினார்.
 
கிரம விமலஜோதி தேரர் (பொ.ப.சே தலைவர்)
கசினோ சூதாட்டம் இரவு விடுதிகளாய் அபிவிருத்தியடைந்த நாடுகள் கிடையாது. இதனால் கலை கலாசாரம் பண்பாடுகள் சீரழிந்த சின்னாபின்னமாகிய நாடுகளே அதிகம் என்று கிரம விமல ஜோதி தேரர் தெரிவித்தார்.
 
கொழும்பில் சம்புத்தத்துவ மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
 
நிலையங்களை இல்லாதொழிக்க இல்லாதொழிக்க உயிர்த்தியாகம் செய்யத் தயார் – பொதுபல சேனா:!
 
இந்தியாவில் கசினோ சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்நாடு பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்து உலகின் மூன்றாவது வல்லரசாக திகழ்கிறது.
 
ஏன் எம்மால் கசினோ சூதாட்டம் இல்லாமல் பொருளாதார அபிவிருத்தியை காண முடியாதா என்று கேள்வியெழுப்பும் பொதுபலசேனா மது, மாது, விபச்சாரம் மற்றும் போதைவஸ்த்துக்களை பெற்றுக் கொள்ளும் சுப்பர்மார்க்கட்டே கசினோ சூதாட்ட மத்திய நிலையமாகும். இதனை கடுமையாக எதிர்க்கின்றோம். தடுப்பதற்கு உயிர்த்தியாகம் செய்யத் தயாராகவுள்ளோம் என எச்சரிக்கை விடுத்தது.
கொழும்பில் சம்புத்தத்துவ மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
 
இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,
 
யுத்தத்திற்கு பின்னர் அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுத்து நாட்டின் கீர்த்தியை வரலாற்றை உலகறியச் செய்வார்களென்று எதிர்பார்த்தோம். ஆனால் பெளத்த தலைவர்கள் தேசப்பற்றாளர்கள் எனக்கூறிக் கொள்கின்றனர். அத்தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் வெளிநாட்டில் படித்துவிட்டு அங்குள்ள கீழ்த்தரமான கலாசாரத்தை எமது நாட்டில் பரப்புவதற்கான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
 
நாட்டை சீரழிக்கும் கபடத்தனமான ஆலோசனைகளையே நாட்டுத் தலைவர்களுக்கு வழங்குகின்றனர். பெளத்த பாரம்பரிய கலாசாரத்தைக் கொண்ட எமது நாட்டில் புராதனச் சின்னங்கள் உள்ளன. அழகிய கடற்கரை உள்ளது. இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. சிறந்த காலநிலையுள்ளது. இதனை உல்லாசப் பிரயாணிகளுக்கு காண்பித்து எமது பெளத்த கலாசாரத்தை தெளிவுப்படுத்துவதன் மூலம் உல்லாசப் பிரயாணத்துறையை மேம்படுத்தலாம். ஆனால் அதற்கு மாறாக எமது அழகிய கடற்கரை பிரதேசத்தில் அரை நிர்வாணத்துடனான பெண்களைக் காட்டி விளம்பரம் செய்கின்றனர்.
 
கசினோ சூதாட்ட பிரேரணையை அரசாங்கம் கொண்டு வந்த போது அதனை ஒரு பிரதேசத்திற்கு கட்டுப்படுத்துவதாகவே தெரிவித்தது. ஆனால் அதனையும் அரசாங்கம் பின்பற்றுவதில்லை.
அவுஸ்திரேலியா
 
சூதாட்ட அரசன் டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் 350 அமெரிக்க டொலர் செலவில் 36 மாடிகள் 400 அறைகளுடனான ஹோட்டல் அமைத்து அதில் கசினோ சூதாட்டத்தையும் நடத்தவுள்ளனர். அரசாங்கம் ஏன் இதற்கு அவசரமாக அனுமதி வழங்க வேண்டும். இந்த சூதாட்ட மத்திய நிலையத்துக்கு மட்டுமல்ல நாட்டில் அனைத்து சூதாட்டங்களையும் எதிர்க்கின்றோம். சூதாட்டத்தை தடுக்க போராட்டங்களை நடத்துவோம் அத்தோடு உயிர்த்தியாகம் செய்யவும் பின்னிற்க மாட்டோம்...
 
மிருகவதையை தடுக்க கோரி பாதையாத்திரை!
 
மிருகவதையை தடுக்க கோரி கதிர்காமம் கிரி விஹாரையில் இருந்து கொழும்பு நகரம் வரையில் பாதையாத்திரையொன்றை மேற்கொள்ள சிங்கள ராவய அமைப்பு தயாராகிறது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய, அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இந்த தகவளை வெளியிட்டுள்ளார் .
இவ்வாறு பாதையாத்திரை மேற்கொண்டதன் பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் .

No comments:

Post a Comment