Pages

Friday, June 14, 2013

அஸ்ரபின் மரணத்திலும் ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் சந்தேகம் உள்ளது: முகம்மட் முசம்மில்!

Friday, June 14, 2013
இலங்கை::ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஸ்ரபின் திடீர் மரணத்தின்பின் தலைமைத்துவத்தை  மிக சூழ்ச்சியாக ரவுப் ஹக்கீம் கைப்பற்றியதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முசம்மில் தெரிவித்தார்.
அஸ்ரபின் மரணத்திலும் ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் சந்தேகம் உள்ளதென அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுடன் ரவுப் ஹக்கீம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாகவும் தமிழ்ச்செல்வன் கொலைக்கு இலங்கை பாராளுமன்றில் அனுதாபம் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏறாவூர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் முஸ்லிம்களை  புலிகள் சுட்டுக் கொலை செய்யும் போது இந்த ஹக்கீம் எங்கு போனார் எனவும் கிழக்கில் முஸ்லிம்களது காணி சொத்துக்களை சூறையாடும்போது எங்கு போனார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவராக செயல்படுவதாகவும் அவர் கிழக்கை மீண்டும் வடக்குடன் இணைக்கும் வேலையே அடுத்த வருட முற்பகுதியில் செய்வார் எனவும் முசம்மில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment