Pages

Sunday, June 16, 2013

வெலிங்டன் ராணுவ முகாமில் 178 வீரர்கள் பயிற்சி நிறைவு!

Sunday, June 16, 2013
குன்னூர்::நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் கட்டமாக 178 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் பயிற்சி நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று வழியனுப்பு விழா நடந்தது. இதில், பங்கேற்ற பயிற்சி ராணுவ வீரர்கள் தேசிய கொடி, பகவத் கீதை, குரான், பைபிள் ஆகியவற்றின் மீது சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர். பின்னர் அணிவகுப்பு மரியாதை நடத்தினர். எம்.ஆர்.சி. ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் சுரேஷ்குமார் தலைமை வகித்து சிறப்பாக பயிற்சி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
அவர் பேசுகையில், Ôஇந்தியாவில் உள்ள ராணுவ முகாம்களில் இங்குள்ள எம்ஆர்சி ராணுவ முகாம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

250 ஆண்டு பழமை வாய்ந்த இந்த முகாமில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பயிற்சி பெற்று தாய்நாட்டுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது பயிற்சி பெற்றுள்ள வீரர்களும் நேர்மையாகவும், மன தைரியத்துடனும் நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபட வேண்டும்Õ என்றார்.பின்னர் வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். விழாவில் உயர் அதிகாரிகள், வீரர்களின் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment