Pages

Sunday, June 16, 2013

13ம் திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச திருத்தங்கள் தொடர்பில் ராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது: வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க!

Sunday, June 16, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச திருத்தங்கள் தொடர்பில் ராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுத்தவுடன் இவ்வாறு ராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
 
வெளிநாடுகளுக்கு இது பற்றி பூரணமாக தெளிவுபடுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு இந்த விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் இந்த விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் திருத்தங்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment