Pages

Monday, May 6, 2013

Navy salvages Lion Air Wreckage:-இரணைதீவு கடற்பரப்பில் லயன் எயார் விமானத்தின் உதிரிப்பாக ங்கள், அதில் பயணித்த பயணிகளின் எலும்பு கூடுகள் உட்பட பல்வேறு பொருட்கள் மீட்பு!

Monday, May 06, 2013
இலங்கை::இரணைதீவு கடற்பரப்பில் லயன் எயார் விமானத்தின் உதிரிப்பாக ங்கள், அதில் பயணித்த பயணிகளின் எலும்பு கூடுகள் உட்பட பல்வேறு பொருட்கள் மீட்பு!
 
லயன் எயார் விமானத்தின் உதிரிப்பாக ங்கள், அதில் பயணித்த பயணிகளின் எலும்பு கூடுகள் உட்பட பல்வேறு பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த இரண்டு தினங்களாக கடற்படையினரும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்கள் தெரிவித்தனர்.
 
புலிகள் இயக்கத்தினரால் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் லயன் எயார் ‘அன்டனோ-24’ என்ற விமானத்தின் உதிரிப்பாகங்களை தேடும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை இரணைதீவு கடற்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டன.
 
மான உதிரிப்பாகங்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையின் 25 சுழியோடிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இரணைதீவு தெற்கே ஒன்றரை கடல் மைல் பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திலிருந்து விமான உதிரிப்பாகங்கள் மீட்டெடுக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொம்பகேவின் வழிகாட்டலில் வடமேற்குக் கடற் பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடியின் ஆலோசனைக்கமைய கெப்டன் ஜயந்த கமகே தலைமையில் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடற்படையின் ரணகஜ, எல்-820 என்ற இரண்டு கப்பல்களும் மூன்று கடற்படை சுழியோடி அதிகாரிகளும் 22 சுழியோடிகளும் இந்த மீட்பு பணியை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
மீட்டெடுக்கப்பட்ட உதிரிப்பாகங்கள் மேலதிக விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் பணியின் போது அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் எலும்புகள், உடுதுணி ஒரு பகுதி, சப்பாத்துக்கள் மற்றும் செருப்புக்கள் ஏனைய பொருட்களும் மீட்டெடுக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
 
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1998 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ம் திகதி 48 பயணிகளுடனும் 8 விமான சிப்பந்திகளுடனும் பலாலியில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த லயன் எயார் விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
 
Navy salvages Lion Air Wreckage!
 
Sri Lanka Navy has commenced salvaging the wreckage of the Lion Air Antonov 24 aircraft, which had crashed into the sea due to a missile attack launched by the LTTE terrorists on 29th September 1998. The salvage operation is being carried out by an SLN specialized diving team led by Captain Jayantha Gamage under the direction of Commander of the Navy, Vice Admiral Jayanath Colombage and the supervision of Commander North Central Naval Area, Rear Admiral Sisira Jayakody.
The wreckage was located at a depth of 25 feet, 1.5 nautical miles south of the Iranathivu Island. Three SLN officers and 22 sailors are involved in the salvage operation amidst the prevailing adverse sea conditions. Two SLN ships, the Landing Craft Mechanized, SLNS Ranagaja and the Landing Craft Utility, L 820, are utilized during the salvage mission.
SLN has the professional expertise and equipment for salvage operations of sophisticated nature and its dedicated personnel are capable of undertaking missions under varied sea conditions. 

No comments:

Post a Comment