Pages

Wednesday, May 22, 2013

“த லாஸ்ட் பேஸ்” ஆவணப்படம் நேற்றுத் திரையிடப்பட்டது! ('The Last Phase' screened Exposes LTTE terror on its own people)

Wednesday, May 22, 2013
இலங்கை::“த லாஸ்ட் பேஸ்” எனும் ஆவணப்படம் நேற்று (மே 20) மாலை கொழும்பு சினமன் லேக் ஹோடலில் திரையிடப்பட்டது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
 
இவ் ஆவணத் திரைப்படமானது, இலங்கையின் முன்னனித் திரைப்படத் தயாரிப்பாளரான ஜீவன் சந்திமாலின் தொகுக்கப்பு, இயக்கத்தில் வடிவமைக்கப்பட்ட, குழந்தை பருவத்தில் இருந்தே ஒரே கருத்தைக் கொண்ட மக்கள் குழுவினருடன் ஒன்றறக்கலந்த ஒரு சுதந்திர போராட்ட வீராங்கனையின் கதையாகும்.
 
இது  புலிகளால் அப்பாவி பொதுமக்கள் உட்பட அதன் உறுப்பினர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர செயற்பாடுகள் ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இருண்ட மர்மங்கள், மரணத்தின் கொடூரம் மற்றும் வன்முறை என்பவற்றை ஊடுருவி, நம்பகத்தன்மையான ஆதாரங்களுடன் உண்மையான போர்க்கள நிலமைகளை நிரூபிக்க முயற்சிக்கின்றது.
 
45 நிமிடங்களை கொண்ட இவ் ஆவணப்படமானது, விசேட அதிதிகள், முப்படைத் தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, வெளிநாட்டு பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கு மத்தியில் திரையிடப்பட்டது..
 

No comments:

Post a Comment