Thursday, May 23, 2013
இலங்கை::இலங்கையின் வடக்கு - கிழக்கில் இயல்பை ஏற்படுத்த இந்தியா பாரிய பங்களிப்பை செய்து வருவதாக அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய நிதியுதவியில் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீடமைப்பு திட்ட ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பெசில் ராஜபக்ச. வடக்குகிழக்கில் தேவைகளை உணர்ந்து இந்தியா வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
இந்தநிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியா வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
செங்கலடி பிரதேச செயலகத்தின் மங்களாகம, பெரிய புல்லுமலை மற்றும் உறுகாமம் ஆகிய கிராமங்களில் இது தொடர்பான வைபவங்கள் இடம்பெற்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான பணிகளை உத்தியோகபூர்வமான ஆரம்பித்து வைத்துள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், வடக்கில் ஏற்கனவே 12 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதில் 10 ஆயிரம் வீடுகள் இந்த வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் காந்தா குறிப்பிட்டார்
4 ஆயிரம் வீடுகள் கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 2000 வீடுகள் இந்திய உதவியுடன் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் நஜீப் ஏ. மஜித் உட்பட அமைச்சர் பசீர் சேகுதாத் பிரதி அமைச்சர்களான எம். எல்.ஏ..எம். ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment