Wednesday, May 08, 2013
வாஷிங்டன்::பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை தொடர்பான திட்டங்களிலும் சீனா இணைந்து செயல்படுகிறது. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், பீரங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் பணியிலும் பாகிஸ்தானுடன் சீனா இணைந்து செயல்படுகிறது.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அளித்துள்ள வருடாந்திர அறிக்கை: சீனா, கடந்த 2007 முதல் 2011ம் ஆண்டு வரையில், ரூ.59,400 கோடிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தங்கள் செய்துள்ளது. சீனாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதுடன், பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை தொடர்பான திட்டங்களிலும் சீனா இணைந்து செயல்படுகிறது.
போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், பீரங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் பணியிலும் பாகிஸ்தானுடன் சீனா இணைந்து செயல்படுகிறது.

No comments:
Post a Comment