Pages

Thursday, May 2, 2013

இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையை பலப்படுத்தி அதன் மூலம் சிறுபான்மையினத்தவரின் அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழி ஏற்படுத்தப்படவேண்டும்:சிவநேசதுரை சந்திரகாந்தன்!

Thursday, May 02, 2013
இலங்கை::இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையை பலப்படுத்தி அதன் மூலம் சிறுபான்மையினத்தவரின் அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழி ஏற்படுத்தப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் அனுஷ்டிக்கப்பட்ட மேதின நிகழ்வின்போது சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“கிழக்கு வாழ் தமிழ் மக்களின் தனித்துவமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வினை மக்களோடு மக்களாக ஒன்றுசேர்ந்து அனுஷ்டித்து வருகின்றது. அந்தவகையில் கிழக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசுடன் ஒன்று சேர்ந்திருந்தபோதிலும், கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அதிகாரங்களுக்காக தொடர்ந்தும் குரல்கொடுக்கும் கட்சி என்பதை நாம் நிரூபித்து வருகின்றோம்.

இலங்கையில் 13 ஆவது அரசியல் திருத்தத்தினூடாக தோற்றம்பெற்ற மாகாண சபை முறையமையானது சிறுபான்;மை சமூகத்தினரின் அரசியல் அதிகாரத்தினை ஓரளவிற்காவது வழங்குகின்ற ஓர் அம்சமாகக் காணப்படுகின்றது. இந்த மாகாண சபை முறைமையானது அதிகாரப் பரவலாக்கத்தினூடாக வலுப்படுத்தப்படவேண்டும்.

இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் திருப்தியடையக் அதிகூடிய குறைந்தபட்ச தீர்வு என்றால் அதிகாரப் பகிர்வு முறைமையின் வாயிலான 13ம் திருத்தத்தின் ஊடான மாகாண சபை முறைமையே தவிர வேறொன்றும் இல்லை. இதனைத்தான் எமது கட்சி இன்று வலுயுறுத்தி நிற்கின்றது.

அத்துடன் இலங்கையில் சில பேரினவாத சிந்தனை கொண்ட கட்சிகள் இன்று தமது அரசியல் சுயலாபத்திற்காக இனவாதத்தையோ, மதவாதத்தையோ கக்குகின்ற நிலையினை அவதானிக்க முடிகின்றது.

அதுமட்டுமன்றி குறைந்த பட்ச அதிகாரத்தையாவது வழங்கும் மாகாண சபை முறைமைக்கு வித்திட்ட 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தினை இல்லாதொழிப்பதற்குரிய கோசங்களை எழுப்பி வருகின்றன.

ஆனால் அவற்றையெல்லாம் அரசு ஜனநாயக முறையில் அணுகுவதுடன், இலங்கையின் சிறுபான்மையினங்களின் அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் இத்தகைய பேரினவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது” எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment