Pages

Sunday, May 12, 2013

வட மாகாணசபைத் தேர்தலில் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு இதுவரையில் இலங்கை அரசாங்கம் கோரவில்லை: ஐரோப்பிய ஒன்றியம்!

Sunday, May 12, 2013
இலங்கை::வட மாகாணசபைத் தேர்தலில் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு இதுவரையில் அரசாங்கம் கோரவில்லை என ஐரோப்பிய ஒன்
றியம் தெரிவித்துள்ளது.
 
வட மாகாணசபைத் தேர்தலின் போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றியத்திடம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக கோரப்படவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென அரசாங்கம் கோரினால் அது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 
 

No comments:

Post a Comment