Saturday, May 04, 2013
இலங்கை::அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்டமிட்டவாறு வட மகாhணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என ஜாதிக ஹெல உறும கட்சி அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு முன்னதாக தங்களது கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் சட்டங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதன் பின்னரே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் மீளாய்வு செய்ப்பட ணே;டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment