Pages

Tuesday, May 28, 2013

தீக்குளித்த தேரரின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு பிக்குகள் ஆர்ப்பாட்டம்!

Tuesday, May 28, 2013
இலங்கை::தீக்குளித்த போவத்தை இந்திர ரத்ன பிக்குவின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கண்டியில் பிக்குகள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கண்டி ஜோர்ஜ் டி சில்வா மேற்தளப் பூங்காவில் இடம் பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் அவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பௌத்த தர்மத்திற்காகவும் நாட்டு நலனுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த மேற்படி தேரரின் கோரிக்கைகள்அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

பௌத்த தர்மத்தை பிரதி பலிக்கும் வகையிலும் அதற்கு ஏற்றவாறும் சட்ட மூலங்கள் பாராளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.மத மாற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சர்வமத அமைப்புக்கள் ஒழிக்கப்படவேண்டும். மாடுவெட்டுதல் முற்றாகத் தடைசெய்யப்படவேண்டும்.
இவை உட்பட இன்னும் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

No comments:

Post a Comment