Wednesday, May 22, 2013
இலங்கை::அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வொன்றையே தமிழ் மக்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்கும் வகையில் அரசாங்கம் தனது செயற் பாடுகளை மாற்றியமைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் வகைப் பொறுப்புக் கூறல் ஆகியவற்றை கட்டியெழுப்புதல் பற்றிய தீர்மானம் தொடர்பாக 2013 ஏப்ரல் 9 ஆம் திகதி எதிர்க் கட்சித் தலைவர் மற் றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கூறிய கருத்துக்கள் தொடர்பில் ஒத்திவைப்புப் பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய இரா. சம்பந்தன் நீண்டகாலம் சமாதானம் நிலைத்திருப்பதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வே பொருத்தமானதாக இருக்கும் இவ்வாறான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அரசாங்கம் தனது நிலைப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொள்ளும் என நாம் எதிர்பார்க்கின்றோம். தமிழ், முஸ்லிம், சிங்களம் என பல் இனங்களைக் கொண்ட இலங்கையில் சிறுபான்மை யினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வகையில் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு என தனியான அடையாளம் உள்ளது. அதேபோன்று சிங்கள மக்களுக்கும் தனியான அடையாளம் உள்ளது.
எ
னினும், சுதந்திரத்தின் பின்னர் தமிழ் மக்கள் இந்நாட்டின் பிரஜைகள் போல சமமாக நடத்தப்படவில்லை இரண்டாம் பட்ச பிரஜைகளாகவே நடத்தப்பட்டனர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் அடங்கியுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காணாமல் போதல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் பற்றிய விசாரணைகள் நம்பத்தகுந்த வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதுமட்டுமன்றி வடக்கு கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகள், மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் தீர்வு, அவசியம் போன்ற காரணங்களுக்காகவே இந்த ஒத்திவைப்புப் பிரேரணையை நான் முன்வைக்கின்றேன்.
வடக்கு கிழக்கு காணி தொடர்பான தற்போது நடவடிக்கைகள் உடனடியாக மாற்ற அரசு விரைந்து செயற்படுவதுடன், மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நேர்மையாக நடைமுறைப்படுத்த பயனுறுதி மிக்க நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

No comments:
Post a Comment