Pages

Tuesday, May 14, 2013

யுத்தத்திற்குப் பின் வன்னி மாவட்டத்தில் எவரும் காணாமல் போயிருந்தால் அது சம்பந்தமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவாதத்திற்கு தயார்: வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் போனிபஸ் பெரேரா!

Tuesday, May 14, 2013
இலங்கை::யுத்தத்திற்குப் பின் வன்னி மாவட்டத்தில் எவரும் காணாமல் போகவில்லையென்றும் அப்படி யாராவது காணாமல் போயிருந்தால் அது யாரென்றும் எப்போது எங்கு காணாமல் போனாரென்று கூறினால் தான் அது சம்பந்தமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவாதத்திற்கு தயாரென்றும் வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியும் வடக்கின் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் போனிபஸ் பெரேரா தெரிவித்தார்.
 
யுத்தத்திற்குப் பின் வன்னியில் எவரும் காணாமல் போகவோ அல் லது கடத்தப்படவோ இல்லையென் றும் அவ்வாறு யாராவது கூறுவதாக இருந்தால் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளத் தயாரென்றும் வன்னி கட்டளைத் தளபதி தெரிவித்தார்.
காணாமல் போதல் மற்றும் கடத்தல் தொடர்பாக அரசுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்துவோர் தமிழ் மக்களின் நலனுக்காக மேற் கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் வன்னி கட்டளை தளபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தத்தின் போது தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம், சிங்கள மக்க ளும் காணாமல் போனதாக சுட்டிக் காட்டும் பொனிபஸ் பெரேரா, மீள் குடியேற்றத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோ சனைக்கமைய தமிழ் மக்களுக்கு முன் னுரிமை அளித்து செயற்பட்டதாகவும் அரசுக்கு எதிராக விரலை நீட்டுவோருக்கு இது மறந்து விட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இடம்பெயர்ந்த சிங்கள மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது கடைசியில் என்றும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் அதனை தெரிந்து கொண்டே உண்மையை பூதாகரமாக்கி கூறுவது கவலைக்குரியது என்றும் வன்னி கட்டளையிடும் அதிகாரி கூறினார்.
வன்னி மாவட்டத்தில் எவராவது காணாமல் போய் அல்லது இடம் பெயர்ந்து இருந்தால், அது தொடர்பாக தன்னை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து அறிவிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள தாகவும் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment