Tuesday, May 21, 2013
இலங்கை::இலங்கையில் எங்கு இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வெளிநாட்டவர்களுக்கு எந்த உரிமையுமில்லை என இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக இராணுவ முகாம்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதை இராணுவமே தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கில் தற்போது மூன்று பிரதான இராணுவ முகாம்களே இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி இந்த கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னர், இலங்கையில் உள்ள மேற்குலக நாடுகளில் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று வடக்கில் இராணுவ முகாம்கள் இருக்கும் இடங்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment