Monday, May 13, 2013

இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படாது: பிரியாவிடை பெற்றுச் செல்லும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா!

Monday, May 13, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படாது என பிரியாவிடை பெற்றுச் செல்லும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமையை, இலங்கைக்கு எதிரான தீர்மானமாக கருதக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையின் விருப்பங்களுக்கு எதிரான வகையில் இந்தியா ஒரு போதும் செயற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய இலங்கை அடிப்படை விருப்பங்களுக்கு இடையில் இடைத்தொடர்பு காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையுடனான உறவுகளில் எவ்வித விரிசலும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில சந்தர்ப்பங்களில் சில விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடு காணப்பட்டாலும் அது உறவுகளை பாதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
 
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியா தீர்வுத் திட்டங்களை திணிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment