Pages

Tuesday, May 14, 2013

மதவாச்சி - தலைமன்னார் ரயில் மார்க்கத்தின் மதவாச்சி மற்றும் மடுவுக்கு இடையிலான பகுதி இன்று திறந்துவைக்கப்படவுள்ளது!

Tuesday, May 14, 2013
இலங்கை::மதவாச்சி - தலைமன்னார் ரயில் மார்க்கத்தின் மதவாச்சி மற்றும் மடுவுக்கு இடையிலான பகுதி இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.
 
அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ, வெல்கம மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்டவர்களின் பங்குபற்றலுடன் இந்த ரயில் மார்க்கம் திறந்துவைக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் LA.R.ரத்நாயக்க குறிப்பிட்டார்.
 
கடந்த யுத்த காலப்பகுதியில் மூடப்பட்டிருந்த தலைமன்னார் ரயில் மார்க்கத்தின் ஒரு பகுதியே இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.
குறித்த பகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதால் இந்த மார்க்கம் திறந்துவைக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறினார்.
 
43 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்தப் பாதை இந்தியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 
மதவாச்சி - தலைமன்னார் ரயில் மார்க்கத்தின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் காலங்களில் முழுமையாக நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் LA.R.ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment