
Friday, May 10, 2013
நோர்வே::நோர்வே அகதிகள் ஆணைக்குழுவும், ஐ.டி.எம்.சி எனப்படும் உள்நாட்டு இடம்பெயர்வைக் கண்காணிக்கும் மையமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த அறிக்கையில் இலங்கையில் போரினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தோரின் நிலை இன்னும் முன்னேறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு இறுதியளவில் இலங்கை உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் நிலவரம் குறித்து நோர்வே அகதிகள் ஆணையகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புலிகள் ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கும் மேலான நிலையிலும் இடம்பெயர்ந்தவர்கள் முகாம்கள், உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகள் மற்றும் இடம்விட்டு இடம் மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையை எதிர்நோக்குவதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களும் தங்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளான, இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் போன்றவைகளை பெறுவதில் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அகற்றப்படாத நிலக்கண்ணி வெடிகள் மற்றும் பிற வெடிபொருட்கள்
தொடர்பிலும் அந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment