Pages

Tuesday, May 28, 2013

இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்கான நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Tuesday, May 28, 2013
இலங்கை::இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்கான நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் மாதிரியைக் கொண்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பொருத்தமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 புலி ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டினால், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கோரக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படக் கூமென எச்சரிக்கை விடுத்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தேவைகளுக்காக எதற்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment