Monday, May 06, 2013
இலங்கை::புலம்பெயர் (புலி)ஆதரவு தமிழர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கோரிக்கை!
புலம்பெயர் (புலி)ஆதரவு தமிழர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் தேர்தல் ஆணையாளருக்கும், கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தலில் (புலி)ஆதரவு புலம்பெயர் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதம் வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில் தேர்தலை நடாத்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இன்றியமையாதது என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் நடாத்துவது தொடர்பில் அரசாங்கம் இன்னமும் அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment